Tuesday, March 21, 2023

11. கொண்டக்கடலை காரக்குழம்பு

 தேவையானவை:

கொண்டக்கடலை 1 கப்

வெங்காயம் 2

தக்காளி 2

பச்சை மிளகாய் 2

சோம்பு 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள் ஒவ்வொன்றும் 1 டீஸ்பூன்

உப்பு,நல்லெண்ணைய்  தேவையானவை.

———-

அரைக்க:

தேங்காய் துருவல் 3/4 கப்

பொட்டுக்கடலை  1 டேபிள்ஸ்பூன்

முந்திரி-பருப்பு  10

கசகசா  1/2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

சோம்பு 1 டீஸ்பூன்

செய்முறை:

கொண்டக்கடலையை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் குக்கரில் வைத்து (4 விசில்) எடுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை (கசகசாவை மட்டும் தண்ணீரில் அரை மணிநேர ஊறவைத்து) விழுதுபோல அரைத்து எடுத்து வைக்கவும்

வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சோம்பு,பச்சைமிளகாய் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவேண்டும்.   வெங்காயம் பொன்னிறமாக  வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள்  தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,தேவையான உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.அரைத்த விழுதை சிறிது தண்ணீருடனும் வேகவைத்த கொண்டக்கடலையுடனும் கலந்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவேண்டும்


No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...