தேவையானவை:
சின்ன வெங்காய ம்10
பூண்டு பல் 10
புளி எலுமிச்சையளவு
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
வெல்லத்தூள் 1 டேபிள்பூன்
உப்பு தேவையானது
நல்லெண்ணை 1/4 கப்
———-
அரைக்க:
மிளகாய் வற்றல் 6
தனியா 3 டீஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
————
தாளிக்க:
நல்லெண்ணெய் 1/4 கப்
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தய ம்1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
—————
செய்முறை:
முதலில் மிளகாய் வற்றல்,தனியா இரண்டையும் வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுக்கவேண்டும்.
பின்னர் மற்றவற்றை எண்ணெய் விட்டு வறுத்து மிளகாய் வற்றல்,தனியா உடன் சேர்த்து விழுது போல அரைக்கவேண்டும்.
வாணலியில் நல்லெண்ணை ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு
இரண்டையும் வதக்கி மஞ்சள் தூள் தேவையான உப்பு ,புளித்தண்ணீர்,அரைத்த விழுது எல்லாவற்றையும் ஒரு கப் தண்ணீருடன் கொதிக்கவைக்கவெண்டும். நன் கு கொதித்த பின் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்
—————————
மிளகு குழம்பை வெங்காயம்பூண்டு இல்லாமலும் செய்யலாம்.
அரைப்பதற்கு
மிளகாய் வற்றல் 8
தனியா. 2 டேபிள்பூன்
உளுத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்
மிளகு 1/4 கப்
சீரகம். 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு.
வாணலியில் நல்லெண்ணெய் வைத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுதுபோல அரைத்து புளித்தண்ண்ணீர் தேவையான உப்பு,இரண்டு க்ப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தபின் சிறிது வெல்லத்தூள் சேர்க்கவும்.
No comments:
Post a Comment