Tuesday, March 28, 2023

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை:

அவரைக்காய் 1/4 கிலோ

புளி எலுமிச்சை அளவு

வெங்காயம் 1

தக்காளி  1

பூண்டு 5 பற்கள்

துருவிய  தேங்காய் 1/4 கப்

சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

————

அரைக்க:தேங்காய் துருவல் 1/2 கப்

சீரக 1 டீஸ்பூன்

———

தாளிக்க:

நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தயம் 1டீஸ்பூன் 

கறிவேப்பிலை சிறிதளவு

———-

செய்முறை:

அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு  சிறிது எண்ணையில் அரை ஸ்பூன் உப்புடன் வதக்கிக்கொள்ளவும்.இதனை தனியே எடுத்து வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் சிறிது மஞ்சள் தூளுடன்  வதக்கவும்.

அத்துடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி,அரைத்த விழுது,புளித்தண்ணீர் , வேகவைத்த அவரை துண்டுகள் எல்லாம்சேர்த்து  கொதிக்கவிடவும்

கடைசியில் துருவிய தேங்காய்,கொத்தால்லித்தழை தூவவும்.

.


 



No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...