Monday, March 20, 2023

8. பூசணி ரசவாங்கி

 தேவையானவை:

பூசணி   1/4 கிலோ

கொண்டக்கடலை 1 கப்

துவரம்பருப்பு 3/4 கப்

புளி 1 எலுமிச்சை அள்வு

மஞ்சள்தூள்  1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

----------------

அரைக்க:

தனியா 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 6

தேங்காய் துருவியது 1 கப்

------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

கறிவேப்பிலை ஒரு கொத்து

-----------------

செய்முறை:

பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்/


துவரம்பருப்பை 2 கப் தண்ணீர்,மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவேண்டும். (4 விசில்)

கொண்டக்கடலையை இரவு தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

கற்சட்டியில் அல்லது பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய  பூசணி துண்டுகளை வதக்கவும்.

பூசணி வெந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து அத்னுடன் தேவையான உப்பு. அரைத்த பொடியுடன் கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் வேகவைத்த பருப்பையும், வேகவைத்த கொண்டக்கடலையயும் கொட்டி சேர்ந்து கொதித்த பின்  சிறிது எண்ணெயில்கடுகு,கடலைபருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...