Monday, March 20, 2023

9.பருப்பு உருண்டைக் குழம்பு

 




தேவையானவை:
பருப்பு உருண்டைக்கு தேவையானவை

துவரம்பருப்பு  1 கப்
கடலைபருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
சோம்பு 1 டீஸ்பூன்
வெங்காய ம் 1
மஞ்சள். தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
உப்பு 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
———-
குழம்புக்கு தேவையானவை:

புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய்3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணைய்  1டேபிள்ஸ்பூன்
 கடுகு  1டீஸ்பூன்
வெந்தயம்.   1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

துவரம் பருப்பையும் கடலைபருப்பையும் 3 மணிநேர தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் மிளகாய் வற்றல்,சோம்பு,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மஞ்சள்தூள்,அரிசி மாவு சேர்த்து  நன்றாக பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 நிமிட வைத்து எடுக்கவும். பருப்பு உருண்டை ரெடி
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எடுக்கவும்.


அடுப்பில்   வாணலியை  வைத்து சிறிது எண்ணெயில்     கடுகு,வெந்தயம் பெருங்காயத்தூள்,மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் சாம்பார் பொடி  தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.நன்றாக கொதித்தபின் ரெடியாக உள்ள பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிது கொதித்த பின் அடுப்பை அணைக்கலாம்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...