தேவையானவை:
பரங்கிக்காய் துண்டுகள் 2 கப்
பால் 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
துருவிய வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
————-
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
பச்சை மிளகாய் 1
அரிசி மாவு 1 டீஸ்பூன்
————
தாளிக்க:
தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
————-
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து பரங்கிக்காய் துண்டுகளை மஞ்சள் தூளோடு வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும் (த்ண்ணீர் விடவேண்டாம்)
அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
பரங்கிக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதையும்தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.
துருவிய வெல்லத்தையும் பாலையும் சேர்க்கவேண்டும்.
பால் சேர்த்த பின் ரொம்பவும் கொதிக்கவிடவேண்டாம்
கடைசியில் தேங்காயெண்ணையில் தளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
No comments:
Post a Comment