தேவையானவை:
வாழைக்காய் 1
பச்சபயறு 1/4 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
————-
அரைக்க:
மிளகாய் வற்றல் 3
தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
புளி சிறிதளவு
————-
தாளிக்க:
தேங்காயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
பச்சபயறை 8 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குக்க்கரில் வைத்து (3 விசில்) எடுக்கவும்.வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வாழைக்காய் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.வாழைக்காய் வெந்தவுடன் தேவையான உப்பு,அரைத்த விழுது,வேகவைத்த பயறு,சிறிது த்ண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
No comments:
Post a Comment