Wednesday, March 22, 2023

17.வாழைத்தண்டு கூட்டு

 தேவையானவை:

வாழைத்தண்டு  ஒரு தண்டு

கடலை-  பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

பயத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 2

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

தனியா தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,தேங்காயெண்ணை தேவையானது

—————

அரைக்க:

தேங்காய் துருவல் 1/4 கப்

பச்சை மிளகாய் 2

மிளகாய்  வற்றல் 2

சீரகம் 1 ஸ்பூன்

———-

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

சீரக 1 டீஸ்பூன்

இடித்த பூண்டு 2

கறிவேப்பிலை சிறிதளவு

———-

செய்முறை:

வாழைத்தண்டை பட்டையை எடுத்துவிட்டு நாரை நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

பயத்தம்பருப்பையும்,கடலைபருப்பையும் குக்கரில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் மஞ்சள் தூள்,உப்பு   சேர்த்து  வாழைத்தண்டுடன் வேகவைக்கவேண்டும்..வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் வேகவைத்த இரண்டு பருப்பையும்,அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.இதனை அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,சீரகம் இடித்த பூண்டுகறிவேப்பிலை தாளித்து  சின்ன வெங்காயம்,தக்காளி இரண்டையும் வதக்கி அதனுடன் தனியா தூள்,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி நன்றாக வதங்கியவுடன் வேகவைத்த வாழைத்த்ண்டு,பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

சுவையான வாழைத்தண்டு  கூட்டு ரெடி.



No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...