தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் 1 கப்
பயத்தம்பருப்பு . 1/2 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
சீரக தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
—————
தாளிக்க:
தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
————
செய்முறை:
பச்சை சுண்டைக்காயை நன்றாக கழுவி விட்டு ஒவ்வொன்றாக இடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் குக்கரை வைத்து அதில் பயத்தம்பருப்பு,இடித்த சுண்டைக்காய்கள்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,குறுக்கே கீறிய பச்சைமிளகாய்,மஞ்சள்தூள்,சீரக தூள்கறிவேப்பிலை தேவையான உப்பு,தண்ணீர் எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்து 3 விசில் கழித்து இறக்கவேண்டும்.
வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் வேகவைத்த சுண்டைக்காய் பருப்பு கலவையை இதனுடன் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கடைசியில் கொத்தால்லித்தழை தூவவேண்டும்.
No comments:
Post a Comment