சின்ன வெங்காயம் 10
பூண்டு 5 பல்
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
------
அரைக்க:
சின்ன வெங்காயம் 5
பூண்டு 3 பல்
தக்காளி 1
தேங்காய் 1 துண்டு
-------
பொரிக்க:
மணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி
சுண்டைக்காய் வற்றல் 10
மிதுக்க வற்றல் 10
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.
தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
பொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.
(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)
இந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு விட சுவை கூடுதலாக இருக்கும்.
சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.
No comments:
Post a Comment