தேவையானவை:
சிறுகீரை 1 கட்டு
வதக்க வேண்டியது:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பூண்டு 2 பல்
புளி சிறிதளவு
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
——
உப்பு, எண்ணெய் தேவையானது
தாளிக்க:
எண்ணெய். 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1டீஸ்பூன்
சீரகம்1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
————
செய்முறை:
சிறுகீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் வதக்க தேவையான பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தண்ணீர் அளவு குறையும் வரை வதக்கவேண்டும்.
வெங்காயம் தக்காளி எல்லாம் வதங்கிய பின் தேவையான உப்புடன் நறுக்கிய கீரையை சேர்த்து மத்தால் மசிக்கவும்.
எண்ணையில் கடுகு,சீரகம்,மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
No comments:
Post a Comment