Monday, March 20, 2023

7. மா,முருங்கை,பலாக்கொட்டை சாம்பார்

 தேவையானவை:

முருங்கை  1

பலாக்கொட்டை 6

மாங்காய் 1

துவரம்பருப்பு 3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி  2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

-------------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 1

கறிவேப்பிலை  ஒரு கொத்து

-------------------------

செய்முறை:

குக்கரில் ஒரு அடுக்கில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 2 கப் தண்ணீருடனும், கீழ்  அடுக்கில் பலாக்கொட்டையை இடித்து சிறிது தண்ணீருடனும் வேகவைக்கவேண்டும். ( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

மாங்காயை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முருங்கைதுண்டுகள்,வேகவைத்த பலாக்கொட்டை ,,தேவையான உப்பு,சாம்பார் பொடி சறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். பின்னர் மாங்காய் துண்டுகளை சேர்க்கவேண்டும்.

எல்லாம்சிறிது வெந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் வேகவைத்த பருப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.

சிறிது எண்ணெயில் கடுகு,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.



No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...