தேவையானவை:
அவரைக்காய். 1/4 கிலோ
பயத்தம்பருப்பு 1/2கப்
வெங்காயம் 1
தக்காளி 1
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
——-
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை சிறிதளவு
————
செய்முறை:
அவரைக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைக்கவேண்டும் (4 விசில்).
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு பற்களை சேர்த்து வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்தக்காளி,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்த அவரைக்காயை சேர்த்து,அவரைக்காய் சிறிது வெந்தவுடன் தேவையான உப்பு,வேகவைத்த பயத்தம்பருப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவெண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.
No comments:
Post a Comment