தேவையானவை:
முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 10
துவரம்பருப்பு 3/4 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------------------
அரைக்க:
தனியா 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
தேங்காய் துருவல் 1/2 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----------------------
செய்முறை:
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்
வெங்காய்த்தை தோலுரித்துக் கொள்ளவும்
துவரம்பருப்பை 1 1/2 கப் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து எடுக்கவும் ( 4 விசில்)
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துளள்வைகளை எண்ணெய்யில் வறுத்து விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முருங்கைக்காயையும் வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
இரண்டும் சிறிது வெந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவைக்கவும்.
புளி பச்சை வாசனை போனபின் அதில் தேவையான உப்பு,அரைத்த விழுது.வெந்த பருப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
சாம்பார் கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லிதழையை தூவவும்.
No comments:
Post a Comment