Monday, March 27, 2023

26. வெண்டைக்காய் மோர் குழம்பு

 தேவையனவை:

வெண்டைக்காய்  10

தயிர் 1 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானவை

கொத்தமல்லித்தழை சிறிதளவு

—————

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

பச்சரிசி 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

————

தாளிக்க:

தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 1

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

—————

செய்முறை:

வெண்டைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும். சிறிது உப்பு சேர்த்து வெண்டைக்காய் வதங்கியவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தயிர்,அரைத்து விழுது,மஞ்சள் தூள்,தேவையான உப்பு  சேர்த்து கட்டி இல்லாமல்  கரைக்கவேண்டும்.

வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து கரைத்து வைத்த் தயிர் கலவையை ஊற்றி அதனுடன் வெண்டைக்காயுடன் தாளித்தவைகளை சேர்த்து ஒரு நிமிடம் கொதித்த பின் கொத்தமல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.

மோர் குழம்பு ரொம்ப நேரம் கொதிக்ககூடாது

மோர் குழம்பு எல்லா நீர்காய்களிலும் பண்ணலாம்..

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...